Tuesday, July 19, 2005

செந்நெல், தாமரை, கரும்பு


சேர் தழைத்த கதிர் செந்நெல் செங்கமலத்து இடையிடையின்,
பார் தழைத்துக் கரும்போங்கி பயன் விளைக்கும் திருநறையூர் . . .

பெரிய திருமொழி 6 - 9 - 7

Saturday, July 09, 2005

பொன்வட்டில்...


பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவேன் ஆவேனே.....

பெருமாள் திருமொழி 4.3

Thursday, July 07, 2005

பெருமாள் திருமொழி 4.2


ஆனாத செல்வத்து * அரம்பையர்கள் தற்சூழ *
வானாளும் செல்வமும் * மண்ணரசும் யான்வேண்டேன் *
தேனார்பூஞ் சோலைத் * திருவேங டச்சுனையில் *
மீனாய்ப் பிறக்கும் * விதியுடையேன் ஆவேனே.

பெரிய திருமொழி 6 - 7 - 1


குடையா வரை ஒன்றெடுத்து ஆயர் கோவாய் நின்றான் கூராராழிப் படையான்

பெருமாள் திருமொழியிலிருந்து . . .


ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே.

Wednesday, July 06, 2005

பெரிய திருமொழியிலிருந்து . . .


பள்ளிக் கமலத்து இடைப்பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி,
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த நறையூர்.

Tuesday, July 05, 2005

திருச்சந்த விருத்தம் 81ஆம் பாசுரம்



கடைந்தபாற்க டல்கிடந்து காலனேமி யைக்கடிந்து,
உடைந்தவாலி தன்பினுக்கு தாவவந்தி ராமனாய்,
மிடைந்தவேழ் மரங்களும் அடங்கவெய்து,வேங்கடம்
அடைந்தமால பாதமே யடைந்துனாளு முய்ம்மினோ

Monday, July 04, 2005

பெரிய திருமொழியிலிருந்து...


ஒளியா வெண்ணெயுண்டானென்று * உரலோடாய்ச்சி ஒண் கயிற்றால் *விளியா ஆர்க்க ஆப்புண்டு * விம்மி அழுதான் ----- பெரிய திருமொழி 6 இல் 7 இல் 4

வணக்கம்! வருக வைணவத் தமிழ் பருக!

ஸ்ரீ:
வைணவ அன்பர்களே,
வைணவத் தமிழுடன் இங்கு சந்திப்போம்!
-இராமானுச அடியர்